ஒன்றை வருடங்களுக்கு முன்பு காணாமல் போன முதியவர் குடும்பத்தினரிடம் சேர்ப்பு
கேரளாவில் ஒன்றை வருடங்களுக்கு முன்பு காணாமல் போன முதியவர் – காரியாபட்டி பகுதியில் ரோட்டில் சுற்றித்திரிந்த வரை மீட்டு கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைத்து குடும்பத்தினரிடம் சேர்க்க உதவிய காவலருக்கு பாராட்டு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ரெங்கராஜன். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ரெங்கராஜன் பணி முடித்து வீட்டிற்க்கு செல்லும் போது சாலையின் ஓரத்தில் ஒரு வயதான முதியவர் கிழிந்த ஆடைகளுடன் பசியில் சோர்ந்து இருப்பதை கண்டு அவரிடம் சென்று விசாரித்தார்.
தனது பெயர் முரளி, கேரளா மாநிலம் கோட்டயம் என்றும் கூறியுள்ளார்.
பின்னர் அவரை குளிக்க வைத்து புதிய ஆடை, உணவு வாங்கி கொடுத்து அவரது உடமைகளை பார்த்து விசாரித்த காவலர் ரெங்கராஜன் அவர் கேரளா மாநிலம், கோட்டயம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. உடனே காவலர் ரெங்கராஜன் முட்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்பு தனது இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்து சென்று தனது ஊரான மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து தேனி செல்லும் பேருந்தில் டிக்கெட் எடுத்து கொடுத்து நடத்துனரிடம் அவரை கேரளா செல்லும் பேருந்தில் ஏற்றி விட சொல்லிவிட்டு முதியவரிடம் கையில் 500 ரூபாய் செலவுக்கு பணம் கொடுத்து அறிவுரை வழங்கி வீட்டுக்கு செல்லுமாறு வழி அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் கோட்டயம் வெல்லூர் காவல் நிலையத்தில் இருந்து காவலர் ரெங்கராஜனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது முதியவர் முரளி பற்றி விசாரித்தனர் அவர் காணாமல் போய் ஒன்றரை வருடம் ஆகிவிட்டது என்றும் எங்கே இருக்கிறார் என்று விசாரித்தபோது பஸ் ஏற்றி விட்டதை ரெங்கராஜன் தெரிவித்து உள்ளார். பிறகு அவர் சென்ற பஸ் நடத்துனரிடம் தொடர்பு செய்து கேட்டபோது அவர் பூம்பாறை சென்று இருப்பர் என்று தெரிவிக்கவே அவர் கேரளா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
கேரளா போலீசார் முரளியை பூம்பாறையில் கோட்டயம் செல்லும் பேருந்தில் இருந்து மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
கேரளா மாநிலத்தில் ஒன்றே வருடமாக காணாமல் போய் தமிழ்நாட்டில் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் சுற்றி திரிந்த முதியவரை மீட்டு உதவி செய்து குடும்பத்தினிடம் சேர்த்து வைத்த காவலர் ரெங்கராஜனின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.