நடிகர் எஸ்வி சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை…. சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பிற்குப் பிறகு, சேகர் அபராதத்தை செலுத்தினார், மேலும் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நடிகர் எஸ்வி சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளரை பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டார்.
இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டது, புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், ஐபிசி மற்றும் தடுப்பு பிரிவு 504 மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் சேகர் குற்றவாளி என நீதிபதி ஜி ஜெயவேல் தெரிவித்து, அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையுடன் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நடிகர் எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீடு செய்ததால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது மனுவின் மீது மீண்டும் நடந்த விசாரணையில் வெளிநாட்டில் உள்ள நண்பர் அனுப்பிய பதிவை படிக்காமல் அப்படியே முகநூல் பக்கத்தில் பதிவிட்டு விட்டேன்.
நான் உள்நோக்கத்தோடு பத்திரிக்கையாளரை அவதூறு செய்யும் எண்ணத்தில் பதிவிட வில்லை என்றார். எஸ் வி சேகர், அவருக்கு எதிராக வாதிட்ட வக்கீல் பெண் பத்திரிக்கையாளர்கள் அவதூறு படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் தான் கருத்துக்களை வெளியிட்டுள்ளார.
சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட நடிகர் எஸ்வி சேகர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஒரு மாத சிறை தண்டனையும் 15 ஆயிரம் அபராதமும் விதித்து கீழ் கோர்ட் வழங்கிய தண்டனையை உறுதி செய்தார் நீதிபதி.