in

பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை தொழில் போட்டியில் ஒருவர் பலி


Watch – YouTube Click

பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை தொழில் போட்டியில் ஏற்பட்ட முன் விரோதத்தில் ஒருவர் வெட்டி படுகொலை.
பலியான நபரின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி ஹைஸ்கூல் தெருவை சேர்ந்தவர்கள் யு.பி.முருகன் மற்றும் பிரபு ஆகிய இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபு அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பின்னத்தேவன் பட்டி பகுதியில் அரசு மதுபான கடையில் பார் நடத்தும் உரிமை பெற்று பார் நடத்தி வருகிறார்.

இதே போல் யூ.பி.முருகன் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்களம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையின் அருகே உரிமம் பெற்று பார் நடத்தி வந்துள்ளார்.

இதில் அரசு மதுபான கடைகளில் மது விற்பனைக்கு விடுமுறை விடும் நாட்களில் பார் நடத்தும் முருகன் மற்றும் பிரபுவும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

எனவே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீதும் பல வழக்குகள் பதிவு செய்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று தேனி அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிரபு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தபோது காவல்துறையினர் பிரபுவை கைது செய்ததோடு 900 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் யு.பி.முருகன் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் தேனி அல்லிநகரம் காவல்துறையினர் பிரபு சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது பிடிபட்டது என நினைத்து கோபமடைந்த பிரபு இன்று இரவு 8 மணி அளவில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள வடுகபட்டி பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து வந்த முருகனை பிரபு வைத்திருந்த அறிவாலை கொண்டு சரமாரியாக தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் கொலையில் பலியான முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கொலை செய்த நபரை தேடி வருகின்றனர்.
சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்ததில் ஏற்பட்ட விரோதத்தால் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கூல்ட்ரிங்ஸ் கடையில் ரகளையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்