in

ஒருத்தர் மட்டும் ஆள்வதற்கு பிறக்கவில்லை, கொள்கை கூட்டணி அதிகார கூட்டணி என்று சொல்வார்கள், அப்படி என்றால் அதிகாரத்தை தலித்திடம் கொடுங்கள்

ஒருத்தர் மட்டும் ஆள்வதற்கு பிறக்கவில்லை, கொள்கை கூட்டணி அதிகார கூட்டணி என்று சொல்வார்கள், அப்படி என்றால் அதிகாரத்தை தலித்திடம் கொடுங்கள்

நாங்கள் உரிமையை கேட்டால் சங்கி என்கிறார்கள் பிரச்சனைகளை திருப்புவதை விட பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அரசு ஏற்படுத்த வேண்டும்

திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும் எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும், பிரச்சனை வருவதை தான் எதிர்பார்க்கிறோம் பிரச்சனை வந்தால் தான் தீர்வு கிடைக்கும்

10 லட்சத்திற்கு மேற்பட்ட பஞ்சமி நிலங்கள் எங்கு சென்றது? அரசு பஞ்சமி நிலங்களுக்கான கமிட்டி போட்டு ரொம்ப வருஷம் ஆச்சு ஏன் தரவுகளை வெளியிடவில்லை? பஞ்சமி நிலங்களுடைய தரவுகளை வெளியிட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்

வலதுசாரி, இடதுசாரி என பேசக் கூடியவர்கள் கூட ஆணவ படுகொலையை பற்றி பேச மறுப்பது இந்த சமூகத்தின் மிகப்பெரிய துர்பாக்கியம்

பிறப்பால் எல்லோரும் சமம் இல்லை என்கிறவர்களை கைது செய்து தனிமைப்படுத்தி, மனநல மருத்துவர்களை கொண்டு ஒரு கவுன்சிலிங் நடத்தும் சிஸ்டத்தை உருவாக்க வேண்டும்

மதுரையில் நடைபெற்ற திருமணவிழாவில் விசிக துணைப்பொதுச்செயலாளர் பரபரப்பு பேச்சு

மதுரை மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் மணியரசுவின் மகள் திருமணவிழா தல்லாகுளம் பூங்கா முருகன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திருமண மேடையில் பேசியபோது :

ஆதிக்க மனப்பான்மை தூக்கி எறியப்படக்கூடிய அரசியலை தான் நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், ஆணவபடுகொலை அதிகமாக நடக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் , ஆணவப்படுகொலைக்கு எதிரான விழிப்புணர்வு கல்வி நிலையங்களில் இருந்து உருவாக்கப்படவேண்டும், பள்ளி கல்வியிலிருந்து உருவாக்கப்பட வேண்டும், அதற்கான சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும்,

தலித் அரசியல் என்பது ஒரு சாதிய அரசியல் அல்ல மனித இனத்திற்கான அரசியல் ; வலதுசாரி, இடதுசாரி என பேசக் கூடியவர்கள் கூட ஆணவ படுகொலையை பற்றி பேச மறுப்பது இந்த சமூகத்தின் மிகப்பெரிய துர்பாக்கியம் , இன்றைக்கு ஆணவ படுகொலை என்றாலே ஒரு கொலையுடன் முடிந்து விடுகிறது

அதிகாரம் எதற்கு தலித் மக்கள் சிறுபான்மை மக்கள் இவர்களுக்கு அதிகாரம் எதற்கு இந்த அதிகாரம் ஊழல் செய்வதற்காக இல்லை அதிகாரத்தினுடைய பலத்தை அனுபவிக்க கிடையாது

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இன்றைக்கும் ஒரு சமமான சமநிலை உருவாக்க முடியவில்லை கல்வி நிலையங்களில் தங்களுடைய ப்ரொபஷனல் எஜுகேஷன் சிஸ்டத்தில் தலித் மாணாக்கர்கள் பெரிதாக சாதிக்க முடியவில்லை

முக்கியமாக தலித் மக்களுக்கான பொருளாதார சுதந்திரம் இல்லை

25 சதவீத மக்கள் இருக்கக்கூடிய தலித் மக்களுக்கு எந்த அளவிற்கு பொருளாதார வலிமை உள்ளது., எந்த அளவிற்கு நிலங்கள் சொந்தமாக இருக்கின்றது என்ற கணக்கை அரசு வெளியிட வேண்டும்

10 லட்சத்திற்கு மேற்பட்ட பஞ்சமி நிலங்கள் எங்கு சென்றது? கமிட்டி போட்டு ரொம்ப வருஷம் ஆச்சு ஏன் தரவுகளை வெளியிடவில்லை ? தலித் மக்களுக்கு சென்றடைய வேண்டிய உரிமை அது எங்கு மறுக்கப்படுகிறது, எந்த நிலப் பலன்களை வைத்து சாதிய ஒடுக்குமுறை உருவாக்கியதோ அந்த நிலப் பலன்கள் தலித் மக்களுக்கு கிடைக்க வேண்டும், சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டும்

இந்த தரவுகள் தமிழக அரசிடம் கண்டிப்பாக இருக்கின்றது கூடிய விரைவில் பஞ்சமி நிலங்களுடைய தரவுகளை வெளியிட வேண்டும் , அதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்

கோவிலில் எல்லோரும் சமம் என்ன செல்லும் பொழுது தலித் மக்கள் இன்றைக்கு பல்வேறு சூழல்களில் கோவிலுக்கு செல்வதில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்

பிபிசி ஆய்வறிக்கை அதனை வெளியிட்டுள்ளார்கள்
இரண்டு சமூகம் கோவிலுக்கு செல்லும்போது ஏற்படக்கூடிய உரிமை ஒரு மத பெரும்பான்மை வாதிகள் மூலம் தடுத்து நிறுத்தப்படுகிறது

அப்போது வருவாய் துறையும் காவல் துறையும் கோவிலுக்கு பூட்டு போடுகிறார்கள் அதனால் தீர்வு கிடைக்காது

ஒரு கோவிலுக்குள் தலித் மக்களை வரக்கூடாது என்று சொல்லும்போது அங்கு தீண்டாமை இருக்கிறது தீண்டாமை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் கோவிலுக்கு பூட்டு போடுவது தீர்வு கிடையாது

கோவிலுக்கு பூட்டு போட்டுவிட்டு அதற்கு நீதித்துறை மூலம் தீர்வு கிடைப்பது கால தாமதத்தை உருவாக்கி உடனடியாக நீதியை கிடைக்க முடியாது

காலத்தை கடத்துவதற்காக கோவிலில் பூட்டு போடுகிறார்கள் என்றைக்கு ஒரு குரல் கோவிலுக்குள் வரக்கூடாது என்று சொல்கிறார்களோ அந்த குரலை கைது செய்து தனிமைப்படுத்த வேண்டும்

பிறப்பால் எல்லோரும் சமம் இல்லை என்கிறவர்களை கைது செய்து தனிமைப்படுத்த வேண்டும் அவர்களுக்கான விழிப்புணர்வுகளை உருவாக்க வேண்டும் அவர்களுக்கான கவுன்சிலிங் சிஸ்டத்தை உருவாக்க வேண்டும் மனநல மருத்துவர்களை கொண்டு ஒரு கவுன்சிலிங் சிஸ்டத்தை உருவாக்க வேண்டும் அதுதான் முக்கியமான ஒன்று

கோவிலுக்குள் பூட்டு போட்டு தலித் மக்களே வரக்கூடாது என்பது சட்டம் அல்ல ; அன்றைக்கு அதே நிமிடத்தில் அதே நொடியில் அவர்களுக்கான உரிமையை இந்த அரசு காவல்துறை மூலம் மீட்டெடுத்து கொடுக்க வேண்டும்

ஆணவப்படுகொலைக்கான சட்டத்தை உருவாக்க வேண்டும், பஞ்சமி நிலங்களுக்கான தரவுகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பது எங்களுடைய தாழ்வான கோரிக்கை

இந்த கோரிக்கைகள் நியாயமான கோரிக்கைகள் உணர்வுபூர்வமான கோரிக்கைகள்

இன்றைக்கும் 25% மக்கள் சேரிகளில் வசித்துகொண்டிருக்கிறார்கள், திருமாவளவனு டன் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் சுற்றுப்பயணம் போகும்போது எல்லா தலித் மக்களின் சேரிகளை பார்க்கும்போது மனிதர்கள் வாழக்கூடிய இடமா? என்ற கேள்வி என் மனதில் எழுந்தது அந்த அளவிற்கு சுகாதாரம் சுற்றுப்புறம் இருந்த்து

சேரியில் பிறக்கக் கூடியவர்கள் 90% குடி நோயாளிகளாக உருவாக்கப்படுகிறார்கள் அவர்களுடைய வேலைவாய்ப்பு அவர்களுடைய கல்வி முறை எல்லாமே சாதிய கட்டமைப்பால் உருவாக்கப்படுகிறது

தன்னுடைய கோபத்தை சொல்லும்போது வன்முறையாளர்கள் , சிறுபான்மையின மக்கள் தங்களது உரிமை கேட்கப்படும்போது தீவிரவாதிகள் புதுசா இப்ப சொல்ல வராங்க நீங்க உங்க உரிமையை கேட்டால் சங்கி என்கிறார்கள் பிரச்சனைகளை திருப்புவதை விட பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அரசு ஏற்படுத்த வேண்டும்

சேரிகளுக்கு என தனியாக வரக்கூடிய சட்டமன்ற பட்ஜெட்டில் தனியாக ஒதுக்கீடு வேண்டும் , சேரிகளுக்காக பொருளாதார சூழல், வீடுகள், கல்வி குறித்து ஒவ்வொரு ஆறு மாதமும் அரசு தரவுகளை பொதுப்பார்வையில் வெளியிட வேண்டும் ,

தலித் இளைஞர்கள் அமெரிக்காவிலும் லண்டனில் படிப்பதற்கு நாம் என்ன திட்டத்தை உருவாக்க போகிறோம் என்கின்ற பல திட்டங்களுடன் எங்களுடைய பயணத்தை நாங்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்

இந்த இயக்கம் உணர்வுபூர்வமானது காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தன் உரிமையை கேட்கும் போது அதற்கான விமர்சனங்களும் அதற்கான பிரச்சனைகளும் எழும் என்பது எனக்கு எப்போதே தெரியும்

இப்போது நிறைய பேர் தொலைக்காட்சிகளில் என்னுடைய ஜாதி பெயரை சொல்லி பேசுகிறார்கள், எனக்கே என்னுடைய ஜாதி தெரியாது. அதனால்தான் திருமாவளவனுடன் நான் இருக்கிறேன்; அவர்கள் முட்டாள்கள் பைத்தியக்காரர்கள் , இது பெரியார் அம்பேத்கருடைய இயக்கம்

இங்கு ஒரு தேர்தல் பிரச்சாரத்தை உருவாக்க வந்துள்ளேன், ஒரு எம்எல்ஏ எம்பி ஆக உருவாக நான் வரவில்லை ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு பிரச்சாரத்தை உருவாக்க தான் நான் இங்கு வந்தேன்

திருமாவளவனின் வலியுறுத்தலில் வந்திருக்கிறேன் எனக்கு பதவி வேண்டும் என்றால் பல பதவி உள்ளது இந்த ஜாதி பெயரை சொல்லி கூப்பிடுவது யூ டியூபில் கத்துவது இதெயெல்லாம் 15வயதில் அம்பேத்கர் பெரியார் புத்தகத்தை படிக்கும் போதே பாத்துட்டோம்

அம்பேத்கரை போன்று விமர்சனத்தை மேற்கொண்டவர்களை யாரும் பார்த்தது கிடையாது திருமாவளவனை போலவும் விமர்சனத்தை எதிர்கொண்டது யாரும் கிடையாது

பிரச்சனை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் , பிரச்சனை வருவதை தான் எதிர்பார்க்கிறோம் பிரச்சனை வந்தால் தான் தீர்வு கிடைக்கும்

அமைதியா பொறுமையா இருந்ததெல்லாம் போதும் அமைதியா ரொம்ப வருஷம் இருந்துட்டோம், பொறுமையாக இருந்து விட்டோம்

கொள்கை கூட்டணி அதிகார கூட்டணி கூட்டணி என்று சொல்வார்கள் அப்போ அதிகாரத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள் அதிகாரத்தை தலித்திடம் கொடுங்கள் , கொள்கை கூட்டணி அதிகார கூட்டணி அல்ல ; அப்போ ஒருத்தர் மட்டும் ஆள்வதற்கு பிறக்கவில்லை

எங்களுக்கான அரசியல் எங்களுக்கான பிரச்சாரத்தை உருவாக்க தெரியும், தேர்தல் அரசியல் உங்களுக்கெல்லாம் தெரியுமா என்ற கேட்ட காலம் போய் தேர்தல் அரசியலை நாங்கள் எப்படி உருவாக்க என்பதை இந்த கடந்த ஆறு மாத காலமாக விசிகவே கட்சி கடந்த ஆறு மாத காலமாக எல்லா தொலைக்காட்சியும் நம்பர் ஒன்னாக இருக்கிறது

எங்களுக்கும் பிரச்சாரத்தை உருவாக்க தெரியும் திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும் எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும்

ஆதிக்கதை ஒழிப்பதற்கு தான் பொறுமையையும் கல்வியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், கோபத்தில் வன்முறைக்கு பதிலாக கையில் பேனா எடுக்க அம்பேத்கர் கற்றுக் கொடுத்திருக்கிறார் , கையில் பேனாவுடன் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறோம்

இவர் இப்பதான் வந்தார் இவர் புதியவர் என்கிறார்கள், உணர்வுகளை, உண்மையை சொல்வதற்கு அனுபவம் தேவை இல்லை எங்கள் குறிக்கோளை அடைவதற்கு தோழர்கள் என்னுடன் இருக்கிறார்கள்

நான் புதிதாக வந்திருந்தாலும் தோழர்களுடைய ஆதரவோடு இயக்கத்தை வலிமையானதாக எப்போதும் திருமாவளின் பாதையில் பயணம் செய்வோம்,
நமக்கான குறிக்கோளை அடைவோம் நமக்கான பயணத்தை புரட்சியாளர் அம்பேத்கர் பெரியார் வழியில் அடைவோம் என்று பேசினார்.

What do you think?

மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோவில் சித்திரை வீதிகளில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரிவான ஆய்வு

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த விவகாரம் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டம்