தமிழகத்தில் மட்டும்தான் குற்றங்கள் இல்லாத பள்ளிகள் உள்ளது பாலியல் ரீதியாக பிரச்சனைகள் தமிழகத்தில் தொடர்கிறது என பொதுவாக சொல்லக்கூடாது குற்றம் செய்பவர்கள் மீது எந்த வித பாகுபாடும் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நெல்லையில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடக்கும் நவீன வேளாண் இயந்திரங்களை கையாளுதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான பயிற்சி முகாமை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்தார் தொடர்ந்து பயிற்சி முகாமில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை நேரில் பார்வையிட்டு இயந்திரங்கள் செயல்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்தார் இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் துணை மேயர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு திமுக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 24 லட்சம் விவசாயிகள அரசின் இலவச மின்சாரத்தில் பலன் பெறுகிறார்கள். இதற்காக அரசு 5740 கோடி ரூபாய் செலவு செய்கிறது.
விவசாய பணிகளுக்கு ஆள் பற்றாகுறை இருப்பதால் இயந்திர மயம் கட்டாயமாக பட்டுள்ளது. உழவு , நடுகை அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது .அதற்கான பயிற்சி மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வேளாண் கருவிகளுக்காக 2 கோடியே இரண்டு லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மானியமாக விவசாயிகளுக்கு நெல்லை மாவட்டத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. குற்றங்கள் இல்லாத பள்ளிகள் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது.பாலியல் ரீதியான பிரச்சினைகள் தமிழகத்திலும் தொடர்கிறது என பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது. அங்கொன்றும் இங்கொன்றும் பிரச்சனைகள் இருக்கலாம்.குற்றம் செய்பவர்கள் மீது எந்தவித பாகுபாடும் இல்லாமல் கடுமையான நடவடிக்கை தமிழக அரசால் எடுக்கப்படும்.இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்வி சிறப்பாக உள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 99% பேர் படிக்கிறார்கள்.12 ம் வகுப்பில் 89% படிக்கிறார்கள். தமிழகத்தின் கல்வி முறை தான் முன்மாதிரியான கல்வி முறையாக உள்ளது.ஜி எஸ் டி வருவாயில் 50% மத்திய அரசுக்கு 50% மாநில அரசிற்கும் வரியாக பெறப்படுகிறது.மத்திய அரசின் பங்கில் இருந்து மாநிலங்களுக்கு 21% பகிர்ந்து அளிக்கும் நடைமுறை இருந்து வருகிறது.மத்திய அரசிற்கு கொடுக்காமல் மாநிலங்களே அந்த 21 சதவீதத்தையும் நேரடியாக வைத்துக் கொண்டால் மக்கள் நல திட்டங்களுக்கு எளிதில் பயன்படுத்த முடியும். மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்படாது.மத்திய அரசு செய்யும் கடன் தள்ளுபடிகள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே செய்யப்படுகிறது. நலிந்தவர்களுக்கு கடன் தள்ளுபடி இல்லாத நிலை இருந்து வருகிறது என தெரிவித்தார்.