in

தழுதாளி கிராம நியாயவிலைக் கடையில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்காத்திருப்பு போராட்டம்

தழுதாளி ஊர்பொதுமக்கள் & தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தழுதாளி கிராம நியாயவிலைக் கடையில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்காத்திருப்பு போராட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் முறைகேடு செய்யப்பட்ட பொருட்களை வெளிசந்தையில் விற்பனை செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்

கடந்த ஒருவருடமாக தழுதாளி கிராமத்தில் 720 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்களின் விபரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து நியாயவிலைக்கடைகளையும் அனைத்து வேலைநாட்களிலும் திறக்கவேண்டும். மற்றும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை பணியாளர்கள் பணியாற்றவேண்டும்.

அனைத்து கடைகளிலும், இருப்பு மற்றும் விலைப்பட்டியல் பதாகைகளில் அன்றைய நிலையை எழுதியிருக்கவேண்டும். இருக்கவேண்டும். புகார்பெட்டியும், புகார் எண்ணும் எழுதியிருக்கவேண்டும். மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் பணியாளர்களை இடமாற்றம் செய்யவேண்டும்.

நியாயவிலைக்கடையில் விநியோகம் செய்யும் பொருட்கள் மற்றும் விலை பட்டியலை வழங்கவேண்டும் கண்டன குரலை எழுப்பினர். இதில் திண்டிவனம் வட்டார விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (18.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

LCU கதை ரெடி…யாகிடுச்சி