in

சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டுக்கான துவக்க விழா மற்றும் பூஜைகள்

பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திரு. ஆரூரன் சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டுக்கான அரவைப் பணி தொடங்கியது

பாபநாசம் தாலுகா, திருமண்டங்குடி கிராமத்தில் அமைந்துள்ள திரு ஆருரான் சர்க்கரை ஆலை (காலஸ் குழுமம்), ஆலையின் நடப்பு அரவை பருவம் 2024-25 துவக்க விழா மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவினை ஆலையின் இணை நிர்வாக இயக்குநர் நடேசன் துவக்கி வைத்தார்கள்.

இந்த ஆலயம் நிர்வாக இயக்குனர் நடேசன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சண்முகம் 300க்கு மேற்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகபட்டிணம் மற்றும் மயிலாடுதுறை சார்ந்த விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட கண்வையர் பெல்ட்டில் கரும்புகளை இட்டு அறுவை பணிகளை துவக்கி வைத்தனர் ஆலை இவ்விழாவில் ஆலை இணை நிர்வாக இயக்குநர் கூருகையில் கால்ஸ் குழுமத்தின் நிர்வாகத்தின் கீழ் வந்த பிறகு இரண்டாவது அரவை பருவத்தினை இன்று துவங்கியுள்ளோம்.

“இந்த விழாவில் முத்தாய்ப்பாக கரும்பு சப்ளை செய்த ஒரு வாரத்தில் சென்ற ஆண்டு வழங்கியது போல் இந்தாண்டும் கரும்பு சப்ளை செய்த ஒரு வாரத்தில் கரும்பு பணம் பட்டுவாடா செய்யப்படும்” என்பதை ஆலை இணை நிர்வாக இயக்குநர் தெரிவித்தார். மேலும் இந்த வருடம் சுமார் ஒரு லட்சம் டன்கள் அரவை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். மேலும் கரும்பு அறுவடை செய்ய வெட்டு ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். ஆளில்லாத முழுவதுமான இயந்திர சாகுபடியை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வண்ணம் 2024-2025ம் ஆண்டுக்கு கரும்பு நடவு பயிர்செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் மானியமாக ரூ.11343ம், ஆலை மூலம் எடுக்கப்படும் பூச்சி மருந்து, களைக்கொல்லி மற்றும் இயற்கை உரத்திற்கு ஒரு ஏக்கருக்கு 50 சதவீத மானியமும் ஆலை மூலம் வழங்கப்படுகிறது. ஆயில் இஞ்சின் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு உபரித்தொகையாக கரும்பு விலையில் கூடுதலாக டன் ஒன்றுக்கு ரூ.50 வழங்கப்படும். விதைகரணை 15 கிலோமீட்டருக்கு மேல் எடுத்து சென்று கரும்பு விவசாயம் செய்திருந்தால் ஒரு ஏக்கருக்கு வண்டி வாடகையில் மானியமாக ரூ.1000 வழங்கப்படும். ஒரே குடும்ப உறுப்பினர்கள் இரு நூறு டன்களுக்கு மேல் சப்ளை செய்தால் கூடுதாலாக சப்ளை செய்யும் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.50 வழங்கப்படும். கட்டை கரும்பில் பழுது நீக்குதல் செய்தால் ஒரு ஏக்கருக்கு ரூ.3151 கூடுதலாக வழங்கப்படும்.

இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி ஒரு மாற்று பயிரான கரும்பு விவசாயத்தை அதிக அளவில் பயிரிடுமாறு ஆலை நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆலை துவக்க விழாவிற்கு பெரும்திரளாக வந்திருந்த விவசாயிகளுக்கும். அரசு அதிகாரிகளுக்கும் நன்றியினை தெரிவித்தார்

What do you think?

நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்

தஞ்சாவூரில் மண்டல அளவிலான இயற்கை வேளாண்மை கருத்தரங்கு