in

பட்டுக்கோட்டை அருகே பரக்கலக்கோட்டை அருள்மிகு பொது ஆவுடையார் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடைதிறப்பு

தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான தென் சிதம்பரம் என்று அழைக்கப்படும் பட்டுக்கோட்டை அருகே பரக்கலக்கோட்டை அருள்மிகு பொது ஆவுடையார் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடைதிறப்பு – தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த பரக்கலக்கோட்டை கிராமத்தில் தென் சிதம்பரம் என்று அழைக்கப்படும் அருள்மிகு பொது ஆவுடையார் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாத சோமவாரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் கார்த்திகை சோமவாரத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது சோமவாரத் திருவிழாவில் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நடை திறப்பதற்கு முன்பு அருள்மிகு பொது ஆவுடையாரின் திருக்கதவிற்கு முன்பு நின்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு சரியாக 12 மணிக்கு நடை திறக்கப்பட்டபோது

பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காட்டப்பட்டது. இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபம் அருகே உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்

மாணவர்களையும், பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர் அவமரியாதை செய்வதாக கூறி மாணவர்கள் வெளிநடப்பு