in

கோடை வெயிலை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கோடை வெயிலை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா

 

செஞ்சி நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல்-பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார்அலி மஸ்தான் திறந்து வைத்தார்.

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி நகர திமுக சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் மற்றும் திருவண்ணாமலை சாலை இந்தியன் வங்கி அருகில் நடைபெற்றது.

செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற நீர் போர் பந்தல் திருவிழாவில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான்கலந்து கொண்டு செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகிலும்,மற்றும் செஞ்சி திருவண்ணாமலை சாலை இந்தியன் வங்கி அருகில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அவர்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கூல்ட்ரிங்ஸ் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் ஜான் பாஷா, சீனிவாசன், பொன்னம்பலம், சுமித்ரா சங்கர்,மோகன் முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரசன்னா,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரசூல் பாஷா, ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் சிங்கம்சேகர், மாவட்டசுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் செல்வம்,மாவட்ட பிரதிநிதி ஜே.எஸ்.சர்தார், தொண்டரணி பாஷா நிர்வாகிகள் பழனி, சையத் ஜாபர், ரஹமதுல்லா, ஜாபர், சாதிக் பாஷா, ஜான் பாஷா, லியாகத்தலி, அசேன்,ஆட்டோ ஆனந்தன், கோகுல், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

அரிசி, பருப்பு உணவு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை

காவல் துறையினர் சோதனையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்