in

புதுச்சேரிக்கு சிறப்பு நிதி ஒதுக்காததை கண்டித்து எதிர்கட்சி தலைவர் சிவா வெளிநடப்பு

புதுச்சேரிக்கு சிறப்பு நிதி ஒதுக்காததை கண்டித்து எதிர்கட்சி தலைவர் சிவா வெளிநடப்பு

 

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு சிறப்பு நிதி ஒதுக்காததை கண்டித்து சட்டபேரவையிலிருந்து எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரியின் 2024-2025 ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் உரையுடன் தொடங்கிய நிலையில், மத்திய அரசு புதுச்சேரிக்கு சிறப்பு நிதி ஒதுக்காததை கண்டித்தும்.

கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாதது, துறைமுகம் விரிவாக்கம், விமான நிலைய விரிவாக்கம், நியாயவிலைக் கடைகள் திறக்காதது, மின்துறை தனியார்மயம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை சுட்டிகாட்டி துணைநிலை ஆளுநர் உரையை கண்டித்து பேரவையில் இருந்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியாகராஜன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் வெளிநடப்பு செய்தனர்.

What do you think?

நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கதுறை அதிரடி சோதனை

மருத்துவரிடம் வாங்கி கட்டி கொண்ட நயன்தாரா? முட்டாள்களுடன் வாதிடக் கூடாது பதிலடி கொடுத்த நயன்