பராசக்தி படத்திற்கு மீண்டும் எதிர்ப்பு
சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா மற்றும் அதர்வா முரளி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி படத்தின் பெயரை சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ் கே 25 படத்திற்கு சூட்டினார்.
இதனால் பல தரப்பட்ட மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சிவாஜி கணேசனின் மூத்த மகனும் சிவாஜி மன்ற தலைவருமான ராம்குமார், சிவகர்த்திகேயன் படத்திற்கு பராசக்தி என்ற பெயர் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பினார்.
ஆனால் பதில் கிடைக்காத நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை நகரில் சிவாஜி புகைப்படங்களுடன் தமிழ் சினிமாவிற்கு பராசக்தி என்பது ஒரே படம்தான் தமிழ் சினிமாவின் வரலாற்றை காப்போம் பராசக்தி பட டைட்டிலை சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்க எதிர்ப்பு தெரிவிப்போம் என்று Poster’ ஒட்டிவருகிரார்கள்.