in

ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் “இராஜபாளையத்தில் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பங்கேற்று பேசினேன், அதில் 2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமான ஒ.பி.எஸ் குறித்து நான் பேசியதை இ.பி.எஸ் குறித்து பேசியதாக சமூக வலைதளத்தில் தவறான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி எனக்கு கிடைத்துள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாத விஷக்கிருமிகள் இதுபோன்ற தவறான வீடியோக்களை வெளியிட்டு உள்ளார்கள். வீடியோவை ஒட்டி திரித்து தனியார் தொலைகாட்சியில் வந்தது போல ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பரப்பி வருகிறார்கள். அவதூறு வீடியோ தொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து உள்ளோம். துரோகி ஒ.பி.எஸ் தூண்டுதலால் என்னை பற்றி அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்வோம்.

தூண்டுகோலாக உள்ள பன்னீர் செல்வத்தின் வீட்டை முற்றுகையிட்டு எங்கும் நடமாட முடியாத நிலையை அவர் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

What do you think?

தென்காசியில் சிறுவர்கள் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

43 நாட்களில் நிறைந்த நிலையில்காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் ஐந்து கோடியை தாண்டியது