in

வருகிற 10 ஆண்டுகளில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கும் அந்த அடிப்படையில் நிதிநிலை அறிக்கை இருக்கும் ஓபிஎஸ் பேட்டி

வருகிற 10 ஆண்டுகளில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கும் என்று பிரதமர் அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – ஓபிஎஸ் பேட்டி

பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது

பட்ஜெட் குறித்த கேள்விக்கு:

வருகிற 10 ஆண்டுகளில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கும் என்று பிரதமர் அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார கட்டணம் குறித்த கேள்விக்கு

மின்சார விலையை அடிக்கடி உயர்த்தி பாமர மக்களிலிருந்து மேல் தட்டு மக்கள் வரை மிகப்பெரிய சுமையை திமுக அரசு தந்திருக்கிறது. இது அனைத்து தரப்பட்ட மக்களையும் பாதிக்கும்.

காவேரி நீர் விவகாரம் குறித்த கேள்விக்கு

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் போராடி பெற்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துகின்ற பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் இருப்பதால் தனக்குள்ள செல்வாக்கை வைத்து கர்நாடகா அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீரைப் பெற்றுத் தர முனைப்பாக இருக்க வேண்டும்.

தேர்தலுக்கு திமுக ஒருங்கிணைப்பு குழு அமைத்தது குறித்த கேள்விக்கு:

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்கு முன்பு நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வாடிக்கையானது ஆனால் இறுதி தீர்ப்பு மக்கள் கையில் உள்ளது.

அம்மா உணவகம் குறித்த கேள்விக்கு

அம்மா உணவகம் மட்டுமல்லாமல் அவர் காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள கோபம் மக்களுக்கு இருக்கிறது அது வரக்கூடிய தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கூறினார்.

What do you think?

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளை யொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை

ஆடிப் பௌர்ணமியையொட்டி அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை