in

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ஆரஞ்ச் அலர்ட் 

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ஆரஞ்ச் அலர்ட் 

 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் திருவிடைமருதூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான திருபுவனம், ஆடுதுறை, திருப்பனந்தாள், பந்தநல்லூர், அணைக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான திருபுவனம் , ஆடுதுறை, திருப்பனந்தாள், பந்தநல்லூர், அணைக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையை எதிர்கொள்ள ஏதுவாக தஞ்சை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் திருவிடைமருதூர், திருபுவனம், திருநாகேஸ்வரம், ஆடுதுறை, சோழபுரம், வேப்பத்தூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்கள், திருவிடைமருதூர் தீயணைப்புத் துறையினர், சுகாதாரத் துறையினர் காவல் துறையினர் தயார்நிலையில் உள்ளனர். மேலும் காற்று அதிகமாக வீசப்படும் நிலை ஏற்பட்டு மரங்கள் விழுந்தால் அதனை அப்புறப்படுத்த பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

கனமழை எதிரொலி காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண் : 1077, 04362-230121 வாட்ஸ் ஆப் எண் – 93450 88997.

What do you think?

நெல்லை பாளையங்கோட்டை திரிபுராந்தேஸ்வரர் கோவிலில் சிறப்பு சங்காபிஷேகம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியில் மிதமான மழை