in

அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கியம் பெண் 32 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு


Watch – YouTube Click

அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கியம் பெண் 32 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு

 

அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் தலை முடி சிக்கி படுகாயம் அடைந்த பெண் தொழிலாளி தொடர்ந்த வழக்கில் கருடன் அப்பள கம்பெனி 32 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள நெடும்பலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் ராஜ் என்பவரது மனைவி கார்த்திகா. இவர் நெடும்பலம் கோவில் சிங்களாந்தி பகுதியில் உள்ள கருடன் அப்பள கம்பெனியில் கடந்த 2023ல் அப்பளம் பேக்கிங் செய்யும் பணி செய்து வந்துள்ளார். இதற்கு நாள் ஒன்றுக்கு 230 ரூபாய் வீதம் வார சம்பளம் பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 22.02.2023 ல் கார்த்திகாவை அப்பள கம்பெனி உரிமையாளர் சீனிவாசன் அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் பணி செய்ய கூறியதாகவும் தனக்கு தெரியாது என்று அவர் கூறிய நிலையில் பணியாளர் ஒருவர் மூலம் ஒருமுறை சொல்லிக் கொடுத்த நிலையில் அவர் இந்த இயந்திரத்தில் பணிபுரிந்துள்ளார்.

அப்போது அவரது முந்தானை இயந்திரத்தில் சிக்கியதால் இயந்திரத்தை நிறுத்த கூறியும் நிறுத்தாமல் வழக்கமாக இயங்கும் வேகத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் இயந்திரத்தை இயக்கியதால் அவரது தலைமுடி இயந்திரத்தில் சிக்கி மூக்கு சதையிலிருந்து தலை மேற்புறத் தோலுடன் உறிந்து மண்டை ஓடு தெரியும் அளவிற்கு அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

அப்போதும் கூட கார்த்திகாவை அப்பள கம்பெனி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியதால் அவர் அங்கிருந்த பணியாளர் மூலம் தன் கணவருக்கு போன் செய்யக் கூறி அதன் பிறகு அவர் வந்தவுடன் ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்த நிலையில் உயர் சிகிச்சைக்காக அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 67 நாட்களாக உள் நோயாளியாக இருந்து பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பி உள்ளார். இருப்பினும் கார்த்திகாவிற்கு அப்பள கம்பெனி உரிய இழப்பீடு தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த 03.07.2023 இது குறித்து கார்த்திகா திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சேகர் உறுப்பினர் லட்சுமணன் அடங்கிய அமர்வு அப்பள கம்பெனியின் அலட்சியம் மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விபத்து நடந்திருப்பதால் கருடன் அப்பள கம்பெனி உரிமையாளர் சீனிவாசன் கார்த்திகாவிற்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக இரண்டு லட்சம் ரூபாயும் வழக்கு செலவு தொகையாக பத்தாயிரம் ரூபாயும் என மொத்தம் 32 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

காதலர் தினதன்று யாரும் அறியாத தன் கடந்த கால காதலை வெளியிட்ட நடிகைகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்படும்