in

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

 

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கப்படவில்லை. ஏறத்தாழ 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை கடந்த 11 ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 410 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு தொடர்ந்த 410 பேருக்கு பணி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கக்கூடிய நிலையில் வெறும் 410 பேருக்கு மட்டும் பணி வழங்க கூடாது , உடனடியாக 40 ஆயிரம் பேருக்கும் பணி வழங்க வேண்டும்,

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமன தேர்வு என்கிற அரசாணை 149 நடைமுறையில் உள்ளது. அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் 1000க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் இட ஒதுக்கீடு… சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

தாய்ப்பால் வாரவிழாவையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி