in

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம்


Watch – YouTube Click

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம்

 

நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் விபத்தில் சிக்கி மூலை சாவடைந்த தூத்துக்குடி டாஸ்மாக் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் மருத்துவர்கள் உடலுக்கு மரியாதை செலுத்திய பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவருக்கு வயது 49.இவர் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் ஊழியராக பணி செய்து வருகிறார்.

இவர் கடந்த 31ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி செக்போஸ்ட் அருகே உள்ள பாலத்தில் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு வந்து சேர்த்த நிலையில் நேற்றைய தினம் மகாராஜன் மூளைச்சாவடைந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் உறுப்பு தானம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் மகராஜனின் உடலில் இருந்து தோல் மற்றும் இரு கருவிழிகள் தானமாக எடுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறுவை சிகிச்சைகள் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.

மகாராஜனின் தோல், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அவரது கண் இரு கருவிழிகளும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

உடல் தானம் செய்த மகாராஜனின் உடலுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் மருத்துவர்கள் மரியாதை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக ஜெயக்குமாருக்கு பிரகாஷ்ராஜ் பதிலடி

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்