in

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் பழனி தைப்பூசத் திருவிழா அன்னதானம்

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் பழனி தைப்பூசத் திருவிழா அன்னதானம்
தமிழ்நாடு அரசு சார்பில் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது ஆண்டாக அன்னதானம் துவங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் வருகின்ற பிப்ரவரி 11 தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது.
அதனை முன்னிட்டு மூன்றாவது ஆண்டாக ஒட்டன்சத்திரம் அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் இன்று முதல் 10 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் நபர்கள் வீதம் இரண்டு லட்சம் பக்தர்களுக்கு அப்பளம், வடை, பாயாசம், சாம்பார் ரசம், மோர் உள்ளடவைகளுடன் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.
 
அன்னதானம் வணங்கும் நிகழ்வை, அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, இணை ஆணையர், மாரிமுத்து, உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், அன்னபூரணி, கொம்பன், தனசேகர் உள்ளிட்ட தலைமையிலான அறநிலை துறை அதிகாரிகள் உணவு வழங்கி துவக்கி வைத்தனர்.

What do you think?

ரதசப்தமி உற்சவம் கற்பக விருஷ புறப்பாடு

திருப்பரங்குன்றம் கோவில் மலை பிரச்சனை குத்தாலத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்