in

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

 

சங்கரன் கோவிலில் 15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது.

தெற்காசி மாவட்டம் சங்கரன் கோவில் 15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணியை கோட்டாட்சியர் கவிதா மற்றும் காவல் துணை கண்கானிப்பாளர் அறிவழகன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

சுவாமி சன்னதி முன்பு இருந்து துவங்கிய பேரணியில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 500க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கபந்து கொண்டு வாக்களர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்களிக்க தகுதியானவர்கள் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், ஜனநாயகத்தை பாதுகாக்க பணம் பெறாமல் வாக்களிப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்ததினர்.

இந்த பேரணியானது சுவாமி சன்னதியில் துவங்கி மெயின் பஜார் மற்றும் திருவேங்கடம் சாலை வழியாக சென்று பள்ளியை சென்றடைந்தது தொடர்ந்து
பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோட்டாட்சியர் மற்றும் துணை கண்காணிப்பாளர் மாணவர்களுடன் சேர்ந்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் தொடர்ந்து தேசிய வாக்காளர் தினம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பழனி செல்வம் மற்றும் வட்டாட்சியர் பரமசிவம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் திரளானோர் பங்கேற்றனர்.

What do you think?

தளபதி 69: Viral…ஆகும் ‘ஜன நாயகன்’ படத்தின் First லுக் Poster

நடிகர் சைஃப் அலி கான் தாக்குதல் வழக்கில் தீடிர் திருப்பம்’