in

சொந்த வீடு கார் இல்லை ராகுல் காந்தி சொத்து மதிப்பு இதோ…


Watch – YouTube Click

சொந்த வீடு கார் இல்லை ராகுல் காந்தி சொத்து மதிப்பு இதோ…

வயனாட்டில் போட்டி போடும் ராகுல் காந்திக்கு மொத்தமாக 20 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தனக்கு சொந்தமாக வீடோ காரோ இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்திக்கு அசையும் சொத்துக்களாக 9.24 கோடி ரூபாய் உள்ளது.

ரொக்கமாக 55,000 ரூபாய் பணமும் வங்கியில் 26.25 லட்சம் ரூபாய் பணமும் பங்கு மற்றும் பத்திரங்களாக 4.33 கோடி ரூபாயும் அவரிடம் உள்ளது.

அதோடு, 3.81 கோடி ரூபாய் மதிப்புள்ள மியூச்சுவல் ஃபண்ட், 15.21 லட்சம் தங்கப் பத்திரங்கள், 4.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் உள்ளது.

இதை தவிர்த்து, ராகுல் காந்திக்கு அசையா சொத்துக்களாக 11.15 கோடி ரூபாய் உள்ளது. அதன்படி தனக்கும் சகோதரி பிரியங்கா காந்திக்கு சொந்தமாக டெல்லியின் மெஹ்ராலியில் விவசாய நிலம் உள்ளது. இதை பரம்பரை சொத்து என ராகுல் காந்தி வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் சொந்தமாக அலுவலக இடம் உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதார். இதன் மதிப்பு தற்போது 9 கோடி ரூபாய்க்கு மேல்.

தனக்கு எதிராக காவல்துறை பதிவு செய்த வழக்குகளின் விவரங்களையும் ராகுல் காந்தி வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக ராகுல் காந்தி மீது போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

பூத் சிலிப் வைத்து ஓட்டு போடலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்