சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய பி. சுசீலா
பின்னணி பாடகி ஆன பி சுசீலா பல மொழிகளில் இதுவரை 40 ஆயிரதிற்கான பாடல்களை பாடி உயரிய விருதான பத்மபூஷன் மற்றும் பல தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.
88 வயதாகும் பி சுசிலாவுக்கு திடீரென்று உடல்நல கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்,
குணமடைந்து தற்பொழுது வீடு திரும்பிய பி சுசீலா தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களுக்கு என் மீது தனி அன்பு இருக்கிறது. பாட்டு என்றால் எனக்கு உயிர் எனக்காக கடவுளிடம் வேண்டிய எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடவுள் எதற்காக இப்படிப்பட்ட குரலை எனக்கு கொடுத்திருக்கிறார் என்று இப்பொழுதுதான் புரிகிறது.
கடவுளை நம்பியவர்களை என்றும் அவர் கைவிட்டதில்லை மருத்துவமனையில் என்னை நன்றாக கவனித்துக் கொண்ட டாக்டர்கள் மற்றும் nurse…அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.