திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி என விலைவாசி உயர்ந்து வருகிறது முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான
பி. தங்கமணி.பேச்சு.
தஞ்சாவூர் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி உயர்த்தப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தியது. மேலும், ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்தி வருகிறது. இதேபோல, அரிசி விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்ந்து வருகிறது.
காவல் பெண் உதவி ஆய்வாளரின் நகைகள் பறிக்கப்பட்டுள்ளன. காவல் துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். திமுக ஆட்சியில் நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்வதால், சட்டம், ஒழுங்கு எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்து 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.