2 ஆண்டுகால தவில் இசை பயணத்தில் தனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என்று பத்மஸ்ரீ விருது பெற்ற தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்தி பெருமைப்பட தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன்,ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது இதில் புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்தி (67) இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் 52 ஆண்டுகால தவில் இசை சேவையை பாராட்டி இந்த விருதினை புதுச்சேரி அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அவர் நாடு முழுவதும் 20, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது, அம்பேத்கர் நேஷனல் விருது, அம்பேத்கர் கலாஸ்ரீ தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
பத்மஸ்ரீ விருது தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்து பலரும் அவருக்கு பாராட்டுக்களௌ தெரிவித்து வருகின்றனர். மேலும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு வாழ்த்துளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்மஸ்ரீ விருது பெற்ற தட்சிணாமூர்த்தி கூறும் பொழுது…
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது இது எனது உழைப்பிற்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி, விருது பெற்றுள்ள தன்னை தனது கிராம மக்களும் பாராட்டுகிறார்கள், தான் பெற்ற விருது தன் கிராமத்திற்கே கிடைத்த மாதிரி உள்ளது. மேலும் கடந்த 52 ஆண்டு காலத்தில் இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கு சென்று தவில் இசை வாசித்ததாகவும் கூறிய அவர் விருத்தினை கிடைத்ததற்கு துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.