in

புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி கல்லூரி மாணவர்களுக்கு களிமண்ணால் பொம்மைகள் செய்வது குறித்து பயிற்சி அளித்தார்.

புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி கல்லூரி மாணவர்களுக்கு களிமண்ணால் பொம்மைகள் செய்வது குறித்து பயிற்சி அளித்தார்.

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் கைவினை கிராமம் உள்ளது. இங்கு பல்வேறு கைவினைப் பொருட்கள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் மாணவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் கைவினை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி களிமண்ணால் பொம்மைகள் செய்யும் அரங்கை அமைத்துள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும், அவ்வப்போது இவரிடம் வந்து களிமண்ணால் கைவினை பொம்மைகள் செய்வது குறித்து பயிற்சி பெற்று செல்கின்றனர். பத்மஸ்ரீ முனுசாமி ஆர்வமுடன் அனைவருக்கும் பியற்சிகளை அளித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போதும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு களிமண்ணால் ஆன கைவினை பொம்மைகள் செய்யும் பயிற்சியை நடத்தினார். இதில் குதிரை, யானை, பூக்கள் மற்றும் பல்வேறு சிறு சிறு பொம்மைகளை எப்படி களிமண்ணால் செய்வது என்பது குறித்து பயிற்சி அளித்தார். கல்லூரி மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

What do you think?

எங்களை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு என்பது அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் இல்லை

ஶ்ரீமீனாட்சி உடனுறை சொக்கநாதர் திருக்கோவில் ஸ்ரீ பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை