பழம் நடிகை சௌகார் ஜானகி வீடியோவை வெளியிட்டு …. வம்பிழுத்த பாடகி chinmayi
சினிமா துறையில் நடிகைகள் தங்களுக்கு ஏற்படும் சங்கடங்களை வெளியில் அம்பலப்படுத்தவே ME TOO என்ற இயக்கம் தொடங்கப்பட்டது.
பல நடிகைகள் ME TOO தொடங்கிய பின் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை வெளிப்படையாக கூறுகின்றன. ஒரு சில நடிகைகளோ மீ டூ வை தவறாகவும் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் பழைய நடிகையான சௌகார் ஜானகி மற்றும் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மீ டூ குறித்து பேசும் ஒரு வீடியோவை சின்மயி தனது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் சௌகார் ஜானகி பேசும்போது மீ டூ வில் சிலர் கீழ்த்தரமான விஷயங்களை செய்கிறார்கள்.
என்றைக்கோ நடந்த ஒரு விஷயத்தை இன்று நடந்த மாதிரி பேசுகிறார்கள் அன்றைக்கு வாய் மூடியிருந்து விட்டு இன்று ஏன் கூறுகிறார்கள் மீ டூ வந்த பிறகு நான் தொலைக்காட்சி பார்ப்பதையே தவிர்த்து விட்டேன்.
என்றைக்கோ ஒருவன் என் கையை பிடித்து இழுத்தான் என்பதை இப்போது கூறுவது அவர்களுக்கு என்ன மாதிரி மரியாதை ஏற்பட போகிறது.
நான் பெண்களுக்காக போராடுகிறேன் ஆனால் 20 வருடங்களுக்கு முன்’ நடந்த விஷயங்களை இப்பொழுது வந்து பரிதாபமாக சொல்வதை எல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ஜானகி கூறியுள்ளார்.
பாதிக்க பட்டவர்களை குற்றவாளியாக்குவதை தான் இந்த வீடியோவில் சௌகார் ஜானகி பாடம் எடுக்கிறார். அரைவேக்காடுகள் கூறிய இந்த வீடியோவை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று இவர்களுக்கு எதிராக Chinmayi குற்றம்சாட்டி இந்த வீடியோ வை வெளிட்டு பரபரப்பை ஏற்படுத்திஇருக்கிறார்.