in

பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 6 கோடியே 84 லட்சம்


Watch – YouTube Click

பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 6 கோடியே 84 லட்சம்

 

பழனி மலைக்கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூ. 6 கோடியே 84 லட்சம் கிடைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பக்தர்கள் வருகை காரணமாக நிரம்பியது.

இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து 1ம் தேதி ,4 ம் தேதி ,5 ம் தேதி என கடந்த மூன்று நாட்களாக எண்ணப்பட்டது. எண்ணிக்கை முடிவில் ரொக்கம் ரூபாய் 6கோடியே 84 இலட்சத்து 59ஆயிரத்து 013 கிடைத்துள்ளது.

பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி. மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தங்கம் 2334 கிராமும், வெள்ளி 57,339 ( 57 கிலோ) கிராமும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 2097 ம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

உண்டியல் எண்ணிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர். உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, என பலர் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

சலங்கை ஒலி என்ற படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை ஜெயபிரதா

சுற்றுச்சூழல் அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் போராட்டம்