in

பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை நகைகளை வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை நகைகளை வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

 

பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக கிடைத்த நகைகளை வங்கியில் தங்க பத்திரமாக முதலீடு செய்ய நடவடிக்கை – 192.984 கிலோ கிராம் தங்க நகைகள் தங்கப் பத்திரமாக மாற்றப்படுகிறது-  இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வங்கி அதிகாரிகளிடம் நகைகளை ஒப்படைத்தார்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை வருகின்றனர். பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

உண்டியல் காணிக்கைகள் கோயில் ஊழியர்களால் தரம் பிரித்து மாத மாதம் என்னப்படுகிறது. உண்டியலில் கிடைத்த நகைகளை பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர்.

இந்தநிலையில்  பயன்பாட்டில் இல்லாத பல தங்க நகைகளில் உள்ள கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் பிற உலோகங்களை நீக்கப்பட்டு மும்பையில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனத்தின் உருக்காலையில் சுத்த தங்கமாக மாற்றம் செய்யவும்,  வங்கியில் தங்க பத்திரமாக முதலீடு செய்யும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி  192.984 கிலோ கிராம் தங்க நகைகளை பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி  அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி மாலா உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில் குமார், அறநிலை துறை ஆணையர் சந்திரமோகன், வங்கி அதிகாரிகள், கோயில் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

What do you think?

திண்டுக்கல் அருகே ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்

சாமியார்பட்டி அருள்மிகு ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி