in

பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோவில் திருக்கோவில் மாசி பிரம்மோற்சவ திருத்தேரோட்டம்

பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோவில் திருக்கோவில் மாசி பிரம்மோற்சவ திருத்தேரோட்டம்

 

பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோவில் திருக்கோவில் மாசி பிரம்மோற்சவ சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது.

புதிய தேரில் ஸ்ரீ சீதா லெஷ்மண சமேத ஸ்ரீராமபிரான் ஏழுந்தருள கோவிந்தா கோபாலா கோஷங்களுடன் பக்தா்கள் தோ் இழுத்து சுவாமி தாிசனம்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ராம சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசி பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாசி திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

11 நாட்கள் நடைபெறும்  இவ்விழாவில் தினமும் காலை தோளுக்கிணியானில் புறப்பாடு பின்னா் திருமஞ்சனம் கோஷ்டி இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்வான 10ம் நாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.

பழைய தோ் பழுதடைந்த நிலையில் பக்தா் ஓருவாின் முயற்ச்சியால் 20 லட்சம் மதிப்பில் 14 அடி உயரத்தில் திருத்தோ் செய்யப்பட்டு நேற்று வெள்ளோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்திற்காக காலையில் நடை திறக்கப்பட்டு காலைசந்தி பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடா்ந்து பகல் 10.00 மணிக்கு கும்ப லக்னத்தில் ஸ்ரீ சீதா லெஷ்மண சமேத ஸ்ரீராமபிரான் திருத் தேருக்கு ஏழுந்தருளினாா்.

சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த ஸ்ரீராமபிரானுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டதும் பக்தா்கள் கோபாலா கோவிந்தா என்று கோஷங்களுடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

மாடவீதி மற்றும் ரத வீதிகளில் திருத்தேர் ஊர்வலமாக சென்று திருக்கோவில் வந்தடைந்தது. நாளை தாமிரபரணி நதியில் தீா்த்தவாாி நிகழ்வுடன் மாசி திருவிழா நிறைவு பெறுகின்றது.

What do you think?

பராசக்தி படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடிக்கும் சிவகர்த்திகேயன்

அல்லு அர்ஜுன், அட்லீ..யுடன் இணையும் நடிகை