சீர்காழி அருகே பனங்காட்டு மாரியம்மன் கோயில் காவடி திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வழுதலைகுடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பனங்காட்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி 1ஆம் தேதி அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஏழாம் நாளான இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் பல்வேறு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்மன் கோயிலில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்து அலகு காவடி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்தணர்.
பின்னர் பனங்காட்டு மாரியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பனங்காட்டு மாரியம்மன் முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா காட்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.