பஞ்சமி தீர்த்த உற்சவம்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்..
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று மதியம் 12 மணிக்கு துவங்கி பஞ்சமி தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
பஞ்சமி தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு பத்மாவதி தாயார், சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்கள் கோவில் தெப்பக்குளத்தின முக மண்டபத்தை அடைந்தனர்.
அங்கு உற்சவர்களுக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் தேன் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து மணி 12:10க்கு வேத பண்டிதர்கள் சக்கரத்தாழ்வாரை திருக்குளத்திற்க்கு கொண்டு சென்று மூன்று முறை தண்ணீரில் மூழ்க செய்து தீர்த்தவாரி நடத்தினர்.
அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் பக்தி முழக்கம் இட்டு புனித நீராடினர்.
பஞ்சமி தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு கோயில் தெரு குளத்தில் புனித நீராடுவதற்காக மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
அவர்களை போலீசார் வரிசையாக புனித நீராட திருக்குளத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.