in

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் ஊராட்சி ஒன்றிய அமைப்பு பதவிகளை கலைக்க கூடாது


Watch – YouTube Click

நெல்லை தென்காசி வேலூர் கள்ளக்குறிச்சி உட்பட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் ஊராட்சி ஒன்றிய அமைப்பு பதவிகளை கலைக்க கூடாது, 5 ஆண்டு கால பதவியை உறுதி செய்ய வேண்டுமென நெல்லை மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தங்களின் கோரிக்கை குறித்து தமிழக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை தென்காசி காஞ்சிபுரம் செங்கல்பட்டு ராணிப்பேட்டை திருப்பத்தூர் வேலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி 9 மாவட்டங்களுக்கு கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்படி 9 மாவட்ட ஊராட்சி, 72 ஊராட்சி ஒன்றியங்கள், 2902 கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் இந்த தேர்தல் நடைபெற்றது. ஆனால் மேற்கண்ட 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 2019 ல் நடைபெற்றது. இந்த 27 மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவிக்காலம் டிசம்பர் 2024 ல் முடிகிறது.

இந்நிலையில் டிசம்பர் 2024 ல் 27 மாவட்டங்களில் மட்டும் இல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் ஊரக வளர்ச்சி தேர்தல் நடத்தப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் என 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 204 ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் பேசும்போது… ஐந்தாண்டுகள் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் ( VPDP ) தயார் செய்து அதன் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றி பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் ஆண்டு வாரியாக உள்ள செயல் திட்டம் அடிப்படையில் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. ஒன்பது மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தமிழக அரசின் அனைத்து துறை சார்ந்த பணிகள், சிறப்பு திட்டங்கள் தொடர்பான பணிகள் மற்றும் கிராம ஊராட்சி அடிப்படை வளர்ச்சி பணிகளை திறப்படம் செய்து கொண்டிருக்கிறோம். எனவே தமிழக முதல்வர் திருநெல்வேலி தென்காசி காஞ்சிபுரம் செங்கல்பட்டு ராணிப்பேட்டை திருப்பத்தூர் வேலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி ஐந்தாண்டு காலம் என்பதை உறுதி செய்து தருமாறும், இந்த 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளை கலைக்க வேண்டாம் எனவும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் மற்றும் அரசின் கூட்டணி கட்சித் தலைவர்களிடமும் இந்த கோரிக்கை குறித்து நேரில் தெரியப்படுத்த இருக்கிறோம் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

கொள்ளிடம் பாலத்தில் நடுவில் உள்ள சிமெண்ட் கட்டையில் இரண்டு சக்கர வாகனத்தை ஒட்டி சாகசம்

புதுச்சேரியில் 2 நாள் நடைபெறும் மாநில அளவிலான பெத்தாங் போட்டி