அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா
நவதிருப்பதிகளில் 6வது திருப்பதியாக திகழ கூடிய பெருங்குளம் அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம் விமா்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தாிசனம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களில் சிறப்பானதாக விளங்கும் நவதிருப்பதி திருத்தலங்கள் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த ஒன்பது திருத்தலங்கள் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாக விளங்குகின்றன.
இங்கு பெருமாளே நவக்கிரகங்களாகச் செயல்படுவதால் நவக்கிரகங்களுக்கு என தனியே சந்நிதி கிடைபாது. நவதிருப்பதிகளில் 6 வது திருப்பதியாகவும் சனி ஸ்தலமாக திகழ்வது திருக்குளந்தை எனப்படும் பெருங்குளம் அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில்.
இத்திருத்தலத்தில் சுவாமி ஸ்ரீ வேங்கடவாணனாகவும், ஸ்ரீ சோரநாட்டியனாகவும், மூலவராக அருள்பாலிக்கின்றாா். தாயாா் ஸ்ரீகுளந்தைவல்லி . உற்சவர் ஸ்ரீ மாயக்கூத்தா். வேதம் தமிழ் செய்த மாறன் என்றழைக்கப்டும் ஸ்ரீ நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றாலும் பங்குனி மாதம் நடைபெறும் பிரமோற்சவ திருவிழா 14 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது.
இந்த ஆண்டிற்கான பங்குனி பிரமோற்சவ கொடியேற்று விழா இன்று காலை கொடியேற்றத்தடன் துவங்கியது. முன்னதாக நேற்றுமாலை சேனை முதல்வா் நகர புறப்பாடு அங்குராா்ப்பணம் நடைபெற்றன.
கொடியேற்ற தினமான இன்றுகாலை திருக்கோயில் நடை றக்கப்பட்டு விஸ்வரூபம் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடா்நது ஸ்ரீதேவி பூதேலி சமேத ஸ்ரீ மாயக்கூத்தா் சிறப்பு அலங்காரத்ததுடன் கொடிமரம் முன்பாக ஏழுந்தருளினாா். முதலில் கொடிப்ட்டம் வீதி உலா வந்ததது.
அதனை தொடா்ந;து கொடி பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு அபிஷேகங்கள் நடைபெற்று நிறைவாக கும்ப தீாத்தம் சோ்க்கப்பட்டது. கொடிமரத்திற்ககு தா்ப்பபைபுல் புது வஸ்திரம் அணிவித்து பெருமாளுக்கும் கொடிமரத்திற்கும் நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
அதனை தொடா்ந்து கோஷ்டி மாியாதை நடைபெற்றது. இன்றிலிருந்து 11 தினங்கள் நடைபெறும் இத் திருவிழாவில் தினமும் காலை தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடு மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதிஉலாவும் நடைபெறுகின்றன. சிறப்பாக வருகின்ற (29.05.25) 5ம் திருநாள் கருடசேவையும். வரும் ஏப்ரல் 4 அன்று தீர்த்தவாாியும் ஏப்ரல் 5 இரவில் தெப்ப திருவிழாவும் ஏப்ரல் 6 அன்று புஷ்ப பல்லக்கு திருவிழாவும் நடைபெறுகின்றது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் ஸ்ரீகுளந்தைவல்லி தாயாா் கைங்கா்யசாபாவினா் செய்து வருகின்றனா்.