சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் கோவிலில் பங்குணி உத்தர திருவிழா
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் கோவிலில் பங்குணி உத்தர திருவிழா அதிர்வேட்டு முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆறுமுகக்கடவுள் உருவம் வரைந்த கொடிக்கு பூஜை செய்யப்பட்டு, புனிதநீர் கலசங்கள் யாக பூஜையுடன் தொடங்கி சண்முகநாதர் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கு அபிசேகம் செய்யப்பட்டது.
மேளதாளம் அதிர்வேட்டு முழங்க கொடி ஏற்றி வைக்கப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 9வது நாள் தேரோட்டமும் பங்குனி உத்த ரத்தன்று காவடிகள் பால் குடங்கள் திருக்கல்யானத்துடன் விழா நிறைவு பெறும்.