in

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா

 

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா இரண்டாம் திருநாளில் ரிஷப வாகனத்தில் முருகப்பெருமான் பவனி

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விஷாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா முன்னிட்டு இரண்டாம் திருநாளில் முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இக்கோவிலில் தனி சன்னதி கொண்டு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறார் ஆண்டுதோறும் முருக பெருமானுக்கு பங்குனி உத்திரப் பெருவிழா 10 நாட்கள் நடைபெற்று வருகிறது இந்த ஆண்டு இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் இரண்டாம் திருநாளில் உற்சவர் முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மங்கள வாத்தியங்கள் மற்றும் வானவெடிகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்கள் அருள் பாலித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

What do you think?

திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் கற்பக விருட்ச வாகனத்தில் திரு வீதி உலா

ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம்