in

தொடர் நோய் தாக்குதல் குறைந்து வரும் பன்னீர் ரோஜா சாகுபடி

தொடர் நோய் தாக்குதல் குறைந்து வரும் பன்னீர் ரோஜா சாகுபடி

 

கொடைரோடு அருகே தொடர் நோய் தாக்குதல் குறைந்து வரும் பன்னீர் ரோஜா சாகுபடி தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே தொடர் நோய் தாக்குதல் காரணமாக பன்னீர் ரோஜா சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதால் மருத்துவம் குணம் கொண்ட பன்னீர் ரோஜா சாகுபடியை மீட்டெடுக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கொடைரோடு மற்றும் சிறுமலை அடிவாரப் பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட பன்னீர் ரோஜா சாகுபடி அதிக அளவு செய்யப்பட்டு வந்தது ராஜா தாணி கோட்டை அம்மையநாயக்கனூர், தர்மபுரி, புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வந்தது கடந்த ஐந்தாண்டு காலமாக பன்னீர் ரோஜா செடிகளை விதவிதமான நோய் தாக்குதலுக்கு ஆளாகி பெருமளவு செடிகள் காப்பாற்ற முடியாமல் அழிக்கப்பட்டுள்ளன.

தற்போது பன்னீர் ரோஜாவுக்கு பதில் டிங்டாங் எனும் பட்டுரோஜாக்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இருப்பினும் நல்ல மருத்துவ குணம் கொண்ட பன்னீர் ரோஜா விற்கு மார்க்கெட்டில் கிராக்கி இருப்பதால் ஒரு சில விவசாயிகள் பன்னீர் ரோஜா சாகுபடி தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ஏக்கருக்கு 20 கிலோ பூத்த பன்னீர் ரோஜா தற்போது இரண்டு கிலோ மட்டுமே கிடைப்பதாக கூறும் விவசாயிகள் செடியில் மொட்டுகள் அரும்பி அதில் 10 மொட்டுகளில் பெருமளவு மொட்டுகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விடுவதாகவும் இதனால் பூக்கள் உற்பத்தி கிடைக்காமல் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதாக கூறும் விவசாயிகள் செடிகளையும் கருகல் நோய் தாக்கி விடுவதால் செடிகள் வளர்ச்சியும் பாதிக்கப்படுவதால் பல விவசாயிகள் பன்னீர் ரோஜா விவசாயத்தை அழித்துவிட்டு மாற்று மலர் விவசாயத்திற்கு சென்று விட்டதாகவும் கூறுகின்றனர்.

பன்னீர் ரோஜாக்கள் அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளதாகவும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் குங்குமப்பூவுக்கு இணையானது பன்னீர் ரோஜா எனவும் ஆஸ்துமா சளி பிரச்சனைகளுக்கு பன்னீர் ரோஜா அருமையான சித்த மருந்து என கூறும் விவசாயிகள் முக்கிய ஆலயங்களில் பன்னீர் ரோஜா மாலைகளுக்கு நல்ல மவுசு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

எனவே அழிவின் விளிம்பில் உள்ள பன்னீர் ரோஜா விவசாயத்தை தமிழக அரசும் தோட்டக்கலை துறையும் மீட்டெடுக்க முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

நாமக்கல் ராசிபாளையம் ஸ்ரீ சக்தி அம்மன் ஆலய மார்கழி திருவிழா

பழனி முருகன் கோயிலில் வேட்டி , சேலை அணிந்து வந்த வெளிநாட்டினர்