in

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அருகே ஆடுகளை தொடர்ந்து தாக்கி வரும் சிறுத்தை


Watch – YouTube Click

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அருகே ஆடுகளை தொடர்ந்து தாக்கி வரும் சிறுத்தை

 

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அருகே ஆடுகளை தொடர்ந்து தாக்கி வரும் சிறுத்தையை பிடிப்பதற்காக அம்பாசமுத்திரம் வன துறையினர் மோப்பநாய் உதவியுடன் சிறுத்தை இருக்கும் பகுதியை தேடி சோதனை செய்யும் பிரத்தியேக காட்சிகள் தற்போது கிடைத்துள்ளது.

சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் இருக்கும் பகுதியை மோப்பம் பிடிப்பதற்கு என வனத்துறையினர் மோப்ப நாய்களை பழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.

இன்று பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அருகே உள்ள அணவன் குடியிருப்பில் பேச்சி முத்து என்ற விவசாயின் வீட்டில் ஆட்டினை சிறுத்தை ஒன்று கடித்து சென்றதாக வந்த தகவலை அடுத்து வனத்துறை சார்பில் இந்த மோப்ப நாய் காட்டை சுற்றி மோப்பம் பிடித்து பின்னர் அந்தப் பகுதியை சுற்றி இறுதியாக பொத்தை பகுதி என்று அழைக்கப்படும் பகுதியில் சிறுத்தை இருப்பதாக காட்டிக் கொடுத்த விஷுவல் .

இதன் பின்னர் அந்தப் பகுதியில் குண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கலாமா? இல்லாவிட்டால் சிறுத்தை நடமாட்டம் அந்த பகுதியில் இருக்கிறதா என கண்காணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் நமக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

கண்மாயில் மீன் திருட்டு குத்தகைக்காரர் உயிரை பறித்த பணியாளர்கள்

மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு