திண்டிவனம் நகரம் செஞ்சி சாலையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரம் செஞ்சி சாலையில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ சிவலிங்கம் ஸ்ரீ துர்கை அம்மன், ஸ்ரீ நவகிரங்கங்கள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று இன்று காலை நான்காம் கால பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து நாடிசந்தானம், ஸ்பரிஸாஹுதி, தத்துவார்ச்சனை, த்ரவிய ஹோமம் செய்யப்பட்டன.
மேலும் வஸ்த்ராதானம் மற்றும் மஹாபூர்ணஹுதி யாக குண்டத்தில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு 8.15 மணி அளவில் யாத்ராதானம்,கடம் புறப்பாடு நடைபெற்றது.தொடர்ந்து காலை 8.30 மணி அளவில் மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கருவறை விமானத்திற்கு பூஜிக்கப்பட்ட கலச நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் காலை 9 மணி அளவில் மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழசத்தில் காட்சியளித்த மூலவஸ்தி அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்ட அமைச்சர், மாநிலங்கவை உறுப்பினர் C. Ve. சண்முகம் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திண்டிவனம் பருவத ராஜகுல மீனவ சமூக ஆலய தர்மகர்த்தாக்கள் மற்றும் பங்குதாரர்கள் செய்திருந்தனர்.