அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விறுவிறுப்பாக நடக்கும் பராசக்தி
ஷூட்டிங்….இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது சிதம்பரத்தில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்புக்காக பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளங்களில் இருந்து எடுக்கபட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
சிவகார்த்திகேயன், ரவிமோகன் மற்றும் அதர்வா நடிக்கும் பராசக்தி படத்தை சுதா கொங்கரா இயக்கத்தில் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டைட்டில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே டைட்டிலுடன் இந்த படத்தின் சூட்டில் நடைபெற்று வருகிறது.
மேலும் சிவாஜி படத்தின் டைட்டில் வைக்கப்பட்டதால் நேஷனல் பிக்சர்ஸ் உடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறது பட குழு.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் தான் பராசக்தியின் கதை.
1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது எம். ராஜேந்திரன் என்ற கல்லூரி மாணவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கபடுகிறது.
இந்த படத்தின் சூட்டிங் தற்பொழுது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. டீசரை வைத்துப் பார்க்கும்போது, பராசக்தி திரைப்படம் மாணவர் அரசியல் உலகில் நடக்கும் ஒரு புரட்சிகரமான கதை என்று கூறப்படுகிறது. அர்ஜுன் நடேசனுடன் இணைந்து சுதா கொங்கரா திரைக்கதை எழுதியுள்ளார்.