பெரம்பலூர் தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளராகக் களத்தில் உள்ள பாரிவேந்தர், தொகுதிக்குத் தான் செய்துள்ள பணிகளைப் பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருகிறார். பாரிவேந்தரின் பிரசாரத்திற்கு பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
எஸ் ஆர் எம் குழுமக் கல்வி நிறுவனங்களில் பெரம்பலூர் தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கட்டணமின்றி இலவசமாக உயர்கல்வி வழங்கப்பட்டு வருவது, கோயில் திருப்பணிகளுக்காக ஏராளமான நன்கொடைகளை அளித்திருப்பது போன்றவை இத்தொகுதியில் பாரிவேந்தருக்குச் சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.
கொரோனா பேரிடர் காலத்தில் இலவச மருத்துவம் மற்றும் மருந்துகளை வழங்கியதும், குடிநீர்த் தட்டுப்பாடு நிலவிய பகுதிகளில் சொந்த செலவில் குடிநீர் வழங்கியதும் தொகுதி மக்களால் நினைவுகூரப்படுகிறது.
குளித்தலை ரயில்வே பாலம், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல மேம்பாலங்களைக் கட்டியது, துறையூர் நாமக்கல் ரயில்பாதைத் திட்டத்திற்காகக் குரல்கொடுத்து வருவது போன்றவையும் பாரிவேந்தருக்குச் சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
போட்டி கடுமையாக இருந்தபோதிலும், இந்தத் தொகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்றுள்ள பாரிவேந்தர் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பது அவருக்குக் கூடுதல் பலமாக இருக்கும் என்பது அவரது ஆதரவாளர்களின் கணிப்பாக இருக்கிறது.