பூங்கா திறப்பு விழா
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் முதல் நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு சிவாஜி நகரில் ரூபாய் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், மின்விளக்கு, மற்றும் இருக்கை வசதிகளுடன் பூங்கா அமைக்கும் பணி முடிவுற்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா காந்தி சேகர் பூங்காவை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பூங்காவை திறந்து வைத்தவுடன் குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து போடி தங்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து செயல் அலுவலர் குகன் மன்ற துணைத் தலைவர் சந்திரசேகரன் பூங்காவினை பார்வையிட்டனர் ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் ரமேஷ்குமார், பழனிவேல், பேரூராட்சி வரி தண்டலர் மதன் ராஜ், ஒப்பந்ததாரர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.