சௌந்தர்யாவிற்காக பார்த்திபன் எழுதிய கவிதை
2004 ஆம் ஆண்டு விமான விபத்தில் மறைந்த நடிகை சௌந்தர்யாவின் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் பார்த்திபன் கவிதை ஒன்றை x…தலத்தில் பதிவிட்டுள்ளார்.
சௌந்தர்யா நினைவு நாள் ஏப்ரல் 17-ஆம் தேதி என்றாலும் நேற்று அவரது நினைவு குறித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
மறக்கத்தான் நினைக்கிறேன்
மறந்தால் தானே நினைப்பதற்கு
மறைந்தால் தானே அழுவதற்கு
இருக்கும்போதே மறைந்து போகிற உறவுகளும் உண்டு போன
பின்பு மனசோடு ஒட்டிக் கொண்டிருக்கும் நினைவுகளும் உண்டு “இவன்”
என பதிவிட்டுள்ளார்.
மறைந்த நடிகை சௌந்தர்யா மற்றும் பார்த்திபன் இருவரும் இணைந்து 2002 ஆம் ஆண்டு இவன் என்ற படத்தில் நடித்தார்கள்.