in

மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையத்தில் கட்சி முகவர்கள் தீவிர சோதனைக்குப்பின் உள்ளே அனுமதி

மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையத்தில் கட்சி முகவர்கள் தீவிர சோதனைக்குப்பின் உள்ளே அனுமதி

 

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 817 அலுவலர்கள் ஈடுபட உள்ள நிலையில் 597 போலீசார் பலத்த பாதுகாப்பு.

வாக்கு எண்ணும் மையத்தில் கட்சி முகவர்கள் தீவிர சோதனைக்குப்பின் உள்ளே அனுமதி.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி(தனி), பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர்(தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தொகுதியில் உள்ள 15,45,568 மொத்த வாக்காளர்களில் ஆண்கள் 5,25,529, பெண்கள் 5,57,693, மூன்றாம் பாலினத்தவர்கள் 21 என 10,83,243 பேர் ஏப்ரல் .19-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ((70.09 சதவீதம்) வாக்களித்தனர்.

1,743 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் இன்று மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கல்லூரியில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

முதலாவதாக அஞ்சல் வாக்கு சீட்டுகள் எண்ணப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுகள், மயிலாடுதுறை தொகுதிக்கு 19 சுற்றுகள், பூம்புகார் தொகுதிக்கு 22 சுற்றுகள், திருவிடைமருதூர் தொகுதிக்கு 21 சுற்றுகள், கும்பகோணம் தொகுதிக்கு 21 சுற்றுகள், பாபநாசம் தொகுதிக்கு 22 சுற்றுகள், தபால் வாக்குகள் 2 சுற்றுகள் எணணப்படுகிறது.

வாக்கு எண்ணும் பணியில் 706 அலுவலர்கள், 111 நுண் பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

594 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முன்னதாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு கட்சி முகவர்கள், செய்தியாளர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

What do you think?

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் நகர திமுக செயலாளர் எ.தயாளன் தலைமையில் நடைபெற்றது

பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு