in

பேவர் பிளாக் சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தி பொது மக்கள்


Watch – YouTube Click

பேவர் பிளாக் சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தி பொது மக்கள்

 

ராஜபாளையத்தில் வீடுகளின் வாசலை விட உயரமாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டுக்கு உட்பட்ட பூபால் பட்டி வடக்கு தெருவில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலையானது பல வீடுகளின் வாசலை விட உயரத்தில் உள்ளது. இதனால் மழை நேரத்தில் அப் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீருடன் கழிவு நீரும் புகுந்து விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பூபால் பட்டி தெருவில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக வடிகாலை ஒட்டி சிமிண்ட் கலவை கொட்டுவதற்காக தரை மட்டத்தில் இருந்து ஒரு அடி உயரத்தில் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பல வீடுகள் பள்ளத்தில் உள்ள நிலையில் மேலும் ஒரு அடி உயரத்திற்கு சாலை உயரமானால் அங்குள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளுடன் 10 சந்துக்களும் பள்ளத்திற்குள் சென்று விடும் என்பதால், தெருவை ஆழப்படுத்தி பணிகளை மேற்கொள்ள கோரி நகராட்சி கவுன்சிலர் ஞானவேலிடம் புகார் தெரிவித்தனர்.

கவுன்சிலர் கூறியும் பணிகளை நிறுத்தாமல் ஊழியர்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டதால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பலகை அடைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகளை பாதியில் நிறுத்திய ஊழியர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சாலை அமைக்காவிடில், புதிய சாலைகளை அமைக்க அனுமதி அளிக்க மறுத்து பொது மக்கள் அந்த பகுதியில் குவிந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் கிராம மக்கள் நடத்திய போராட்டம்

குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் பஞ்சு மிட்டாய்