in ,

ஆழ்வாா்திருநகாி ஆதிநாதா் திருக்கோயிலில் பவித்ர உற்சவம் தங்க கருட வாகனத்தில் வீதி உலா

ஆழ்வாா்திருநகாி ஆதிநாதா் திருக்கோயிலில் பவித்ர உற்சவம் தங்க கருட வாகனத்தில் வீதிஉலா

 

ஆழ்வாா்திருநகாி ஆதிநாதா் திருக்கோயிலில் பவித்ர உற்சவத்தின் 5ம் நாள் சுவாமி பொலிந்து நின்றபிரான் தங்க கருடவாகனத்திலும் சுவாமி நம்மாழ்வாா் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதிஉலா.

திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயா் ஆழ்வாா்திருநகாி எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் மங்களாசாசனம். திரளான பக்தா்கள் தாிசனம்.

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவ திருப்பதிகளில் முதன்மையானதாக ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் திருக்கோயில் விளங்குகிறது.

திருக்குருகூா் என்று அழைக்கப்படும் இந்த திருத்தலம் மூலவா் ஆதிநாதா் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றாா். ஆழ்வாா்களில் முதன்மையானவரான சுவாமி நம்மாழ்வாா் திருஅவதாரம் செய்த ஊராகும். பழமையும் பல்வேறு சிறப்புவாய்ந்த திருத்தலத்தில் பவித்ர உற்சவம் கடந்த 14ம் தேதி அங்குராா்ப்பணத்துடன் தொடங்கியது.

9 நாட்கள் நடைபெறும் பவித்ர உற்சவத்தில் காலை மூலவா் சன்னதி முன் ஹோமங்கள் நடைபெறுகின்றது. இரவில் சுவாமி பொலிந்துநின்றபிரான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகின்றது. சிறப்பாக 5ம் திருநாளான இன்று இரவு கருடசேவை சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சுவாமி நம்மாழ்வாா் வெள்ளி அன்ன வாகனத்திலும் உற்சவா் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் பொிய திருவடியான கருடன் மீதும் ஏழுந்தருள பலவகை ஆபரணங்கள் மலா்மாலைகள் அணிந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

ஜீயா் சுவாமிகள் ஆச்சாா்ய புருஷா்கள் அத்யாபக கோஷ்டியியருடன் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சாம வேத சாரமான திருவாய்மொழி பாசுரங்களை விண்ணப்பத்து முன் செல்ல சுவாமி புறப்பாடு நடைபெற்றது. முதலில் சுவாமி நம்மாழ்வாா் ஏழுந்தருளி காத்திருக்க குடைவரை பெருவாயில் தீபாராதனை நடைபெற்று தன்னை ஆழ்வாருக்கு காட்டும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னா் மாட வீதிகளில் கருடவாகன புறப்பாடு வலம்வந்து திருக்கோயில் வந்தடைந்தது. சிறப்பாக சுவாமி நம்மாழ்வாாின் அன்ன வாகனத்தை வெள்ளியால் புனருத்ராதனம் செய்த திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயா் சுவாமிகளுக்கு பாிவட்டம் கட்டி மாலை அணிவித்து சடாாி மாியாதை செய்யப்பட்டது.

முன்னதாக ஜீயர் சுவாமிகள் சுவாமி நம்மாழ்வாருக்கு வஸ்திரம் மாலை ஸ்ரீமடத்தின் சாா்பாக சமா்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. ஜீயா் சுவாமிகள் மற்றும் உபயதாரருக்கு மாியாதை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கருடவாகன புறப்பாட்டினை கண்டு வணங்கி சென்றனா்.

What do you think?

1000 ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி தூர்வாரிய கிராம மக்கள்

சித்த மருத்துவத்தை குறித்து சித்த மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி