பாதுகாப்பு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி அமைதியான முறையில் பேரணி
விருதுநகரில் தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் சார்பாக பாதுகாப்பு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி அமைதியான முறையில் நடைபயண பேரணி …
விருதுநகர் பர்மா காலனி முக்கு அருகே தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக மாவட்ட தலைவர் முகமது ஷபிக் தலைமையில், தற்ப்போதைய ஒன்றிய அரசு இந்தியாவிலுள்ள பாதுகாப்பு தலங்களை பாதுகாக்க தவறியதை கண்டித்தும் , மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து பாதுகாப்புதலங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் அமைதியான முறையில் நடைபயண பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காண்போம், இந்தியாவின் இறையான்மையை பாதுகாப்போம் ,வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்,
என்ன ஆச்சு,என்ன ஆச்சு,வழிபாட்டுத் தல பாதுகாப்பு சட்டம் 1991 என்ன ஆச்சு, வழிபாட்டுத் தலங்கள் அபரிக்கப்படுவதை நீதிமன்றங்கள் தடுத்திட வேண்டும்,
இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள்வழிபாடு,வேண்டாம் வேண்டாம் வழிபாட்டு தலங்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் வேண்டாம், காத்திடு காத்திடு மத நல்லிணக்கத்தை காத்திடு உள்ளிட்ட வாசகங்களை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி இந்த பேரணியில் கலந்து கொண்டனர்,
இந்த பேரணியானது பர்மா காலனி முக் குரோட்டில் ஆரம்பித்து, பாவாலி ரோடு வழியாக தேசபந்து மைதனம் அருகில் உள்ள அசன் ஹோட்டல் முன்பு முடிவடைந்தது.