நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடிய மூன்று நபர்களுக்கு அபராதம் விதிப்பு
திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவுப்படி தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரக அலுவலர் மௌனிகா தலைமையில் சிவகிரி தெற்கு பிரிவு வானவர் சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சிவகிரி வனச்சரக எல்கைக்குட்பட்ட ஒப்பனையாள்புரம், கிராமத்திற்கு அருகில் உள்ள பெரியகுளம் கண்மாய் அருகில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய சிவகிரி சங்குபுரம் இந்திரா காலனி சார்ந்த மகன் கடற்கரை, சங்கரன்கோவில் ஒப்பனியாபுரம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த வீரன் மகன் பால்துரை, கடையநல்லூர் புளியங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சின்ன இசக்கிஎன்பவர் மகன் பெரிய முருகன், ஆகிய மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் இவர்கள் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடிய குற்றம் மற்றும் மான் கொம்புகள் வைத்திருந்த குற்றம் உறுதி செய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு சிவகிரி வனச்சரகத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் பதுக்கி வைத்திருந்த மான் கொம்பு உள்ளிட்டவைகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டதால் மூன்று நபர்களுக்கும் தல ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.