in

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைமேடை டைல்ஸ்கள் பெயர்ந்து விடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைமேடை டைல்ஸ்கள் பெயர்ந்து விடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி

 

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பிரதமர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்த ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிப்பதோடு, பணிகளை தரமான வகையில் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை, புதிதாக பதிக்கப்பட்ட நடைமேடை டைல்ஸ்கள் பெயர்ந்து விடுவதால் அதிர்ச்சி.

மத்திய அரசின் அம்ரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் 90 ரயில் நிலையங்கள் உட்பட, நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தில், மயிலாடுதுறை ரயில் நிலையத்தை ரூ.20.46 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு.6-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக ரயில் நிலைய முகப்பு, நடைபாதை பகுதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைய நுழைவு வாயில் பகுதியில் முகப்பு பகுதி இடிக்கப்பட்டு, புதிய முகப்புக்கான கட்டுமானப் பணி, புதிதாக நுழைவு வாயில் கட்டுமானம் நடந்து வருகிறது. இந்நிலையில் பணிகள் மிகவும் தொய்வாக நடைபெறுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பணிகள் தரமற்ற முறையில் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் நாள் தோறும் ரயில் நிலையத்துக்குள் செல்லும் பயணிகளுக்கும், நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கும் பல்வேறு இடையூறுகள், சிரமங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

ரயில் நிலைய முகப்பு பகுதி அருகே செயல்பட்டு வந்த கட்டண அடிப்படையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் அகற்றப்பட்டுவிட்டதால், ரயிலில் வெளியூர் செல்லும் பயணிகள் எவ்வித பாதுகாப்புமின்றி தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

கட்டுமானப் பணிகள் தரமாக மேற்கொள்ளப்படுவதை தொடர்ச்சியாக அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்துகின்றனர்.

மயிலாடுதுறை ரயில் நிலைய மேம்பாட்டுக்கான கட்டுமானப் பணிகள்கள் தொடங்கப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகின்றன. ஆனால் பணிகள் மிக தொய்வாகவே நடைபெற்று வருகின்றன. நாள் தோறும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே வேலை செய்கின்றனர். பணிகள், தொடர்ச்சியான அதிகாரிகள் கண்காணிப்பு இன்றி நடைபெறுகின்றன.

இதனால் பணிகள் தரமற்ற வகையில் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. ரயில் நிலையத்தின் உள்ளே நடை மேடைகளில் மிகவும் வழுவழுப்பான டைல்ஸ் பதிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் சாரல் அடிக்கக் கூடிய நிலையில், தரைப்பகுதி நனைந்து, பயணிகள் குறிப்பாக வயதானோர் வழுக்கி பாதிப்புக்குள்ளாக்கும் நிலை ஏற்படும்.

மேம்பாட்டுப் பணிகள் காரணமாக பயணிகள் ரயில் நிலையத்துக்குள்ளே செல்வதற்கு கூட சிரமமான நிலை உள்ளது. வாகன நிறுத்துமிடம் செயல்பட்டு வந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் தினசரி பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாத அல்லது உரிய பாதுகாப்பின்றி நிறுத்திச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நடைமேடையில் பதியப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் பல்வேறு இடங்களில் பெயர்ந்துள்ளன இதனால் பயணிகள் கால் இடறி கீழே விழும் ஆபத்து உள்ளது. ரயில் நிலைய கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து தரமாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

What do you think?

பாண்டிய மன்னன் போல வேடமடைந்து நூதன முறையில் முற்றுகைப் போராட்டம்

மயிலாடுதுறையில் பரபரப்பை கிளப்பிய சப்தம் வீடுகளில் விரிசல் மக்கள் அதிர்ச்சி