பாரதி பூங்கா எதிரே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி
புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பகுதியில் நீர் வராததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் அருகே அமைந்துள்ள பாரதி பூங்கா, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு நேரு சிலை அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.
இந்த குடிநீர் சுத்திகரிப்பு டேங்கில் நகராட்சி மூலம் நீர் ஏற்றப்பட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயில் நீர் ஏற்றாமல் முறையான பராமரிப்பின்றியும் தூய்மை இன்றி காணப்படுகிறது .
மேலும் தற்போது கோடை காலம் துவங்கிய நிலையில் விடுமுறை தினத்தை ஒட்டி பூங்காவிற்கு வந்த குழந்தைகளும் பொதுமக்களும் இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயில் நீர் வராததால் ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே இந்த குடிநீர் நிலையத்தை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் இயக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் பொதுமக்கள் கடற்கரையில் குளித்துவிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்தி கை கால் முகம் கழுவுவது குளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடாதபடி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பகுதியில் நகராட்சி சார்பில் ஒரு நபரை நியமித்து இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.