in

மயிலாடுதுறை குடிநீர் வழங்குவதாக குற்றச்சாட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் 

மயிலாடுதுறை மாவட்டம் குறிச்சி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் வசிக்கும் பகுதியில் உபயோகப்படுத்த முடியாதபடி தரமற்ற குடிநீர் வழங்குவதாக குற்றச்சாட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் 

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே குறிச்சி கிராமத்தில் இபி காலனி தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமத்திலேயே போர் போட்டு தண்ணீர் வழங்கப்பட்டது

அந்த தண்ணீர் இரும்பு தாதுக்கள் சேர்ந்து கலங்கிய நிலையில் குடிக்க தரம் பெற்று காணப்படுகிறது புதிய இணைப்பு வழங்கிய காரணத்தால் பழைய கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் இணைப்பை துண்டித்து விட்டனர் இதன் காரணமாக பொதுமக்கள் தரமற்ற குடிநீரை உபயோகிக்க முடியாமல் வயல்வெளிகளில் பயிர்களுக்கு பாயும் தண்ணீரை சென்று பிடித்து உபயோகப்படுத்தி வருகின்றனர்.

தரமற்ற குடிநீர் வழங்க கோரி பலமுறை மனு செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பெண்கள் காலி குடங்களுடன் குறிச்சி மயிலாடுதுறை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதன் காரணமாக பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த மணல்மேடு காவல்துறை ஆய்வாளர் ராஜா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் நல்ல குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

What do you think?

ஏ பி ஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் மரக்கன்று நடப்பட்டன

திருச்செம்பள்ளி பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் சமையல் கலைஞர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு.