in

தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்


Watch – YouTube Click

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவிழ்த்தான் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ. இராமலிங்கபுரம் கிராமத்தில் 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இன்று காலை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு தொடங்கியது. சுமார் 50 பேர் வாக்களித்திருந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோருக்கு வாக்குகள் இல்லை என தேர்தல் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதன் பேரில் சிலர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்ததால் அவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் முத்துமாரி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தேர்தல் முடிந்ததும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு விடுபட்ட அனைவரின் வாக்குகளும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத பொதுமக்கள் விடுபட்ட அனைவருக்கும் வாக்கு கிடைக்கும் வரை தாங்கள் யாரும் வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறி தற்போது தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் வாக்குச்சாவடி மையம் வாக்காளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் வாக்களித்தார்

அதிமுகவின் முன்னாள் எம்பி ப.குமார் வாக்கு பதிவு செய்ய மறுத்து வெளிநடப்பு